தென்காசி அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர்தயாளன் திறந்துவைத்தார்
தென்காசி தலைமை மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் ரூபாய் 10 லட்சம் செலவில் தாய்ப்பால் வங்கி அமைக்கப்பட்டது
இவ்விழாவிற்கு சுகாதார பணி இணையஇயக்குனர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார் ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் : உறைவிட மருத்துவர் அகத்தியன்: பொது சுகாதார இயக்குனர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட கலெக்டர் தாய்ப்பால் வங்கி திறந்து வைத்தார் சின்ன இதன் செயல்பாடுகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார் இதில் முன்னாள் அரசு டாக்டர் அப்துல் அஜீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர் முடிவில் டாக்டர் கீதா நன்றி கூறினார்
ந.சிவா நிருபர் அம்பாசமுத்திரம்